சாம்பல் பூசணி பருப்பு சாம்பார்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
- சாம்பல் பூசணிக்காய்கால் கிலோ
- பெரிய வெங்காயம்1
- பெரிய தக்காளி1
- கறிவேப்பிலை 1 கொத்து
- பச்சை மிளகாய் 2-4
- மிளகாய் வற்றல்2
- தேங்காய் துருவல் கால் கப்
- பருப்பு 2 கப்
- மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
- சீரகத்தூள் அரை டீஸ்பூன்
- பூண்டு பல் 6
- கடுகுஅரை டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
- எண்ணெய்தேவைக்கேற்ப
- உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
- குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், பூண்டு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
- பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும்.
- பருப்பு வெந்ததும் அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூசணிக்காய், மல்லி இலை மற்றும் உப்பு சேர்க்கவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த தேங்காயை பூசணிக்காய் மற்றும் பருப்புடன் சேர்த்து குக்கரை மூடி மீண்டும் ஒரு விசில் விடவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
- தாளித்ததை வெந்த பூசணி பருப்பில் கொட்டி கலந்து விடவும். இப்போது சுவையான சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் தயார்.
0 comments:
Post a Comment