Showing posts with label சமையல் குறிப்புகள் - சாம்பல் பூசணி. Show all posts
Showing posts with label சமையல் குறிப்புகள் - சாம்பல் பூசணி. Show all posts

Wednesday, 1 November 2017

சாம்பல் பூசணி கிச்சடி

சாம்பல் பூசணி கிச்சடி

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
  • பூசணிகால் கிலோ
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • சீரகம்அரை டீஸ்பூன்
  • கடுகுஅரை டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்
  • கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய்3 9கீறியது)
  • சாம்பார் பொடி1 டேபிள் ஸ்பூன்
  • தேங்காய் துருவல்கால் கப்
  • கொத்தமல்லி 1 கைப்பிடி
  • கறிவேப்பிலை 1 கொத்து
  • உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :

  •   சாம்பல் பூசணியின் கடினமான மேல் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும், கீறிய பச்சை மிளகாய் போட்டு, கருவேப்பிலையும் சேர்த்து தாளிக்கவும்.
  • பிறகு நறுக்கிய பூசணியை சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
  • பின் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சாம்பல் பூசணி கிச்சடி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதத்துடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

சாம்பல் பூசணி பருப்பு சாம்பார்

சாம்பல் பூசணி பருப்பு சாம்பார்

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
  • சாம்பல் பூசணிக்காய்கால் கிலோ
  • பெரிய வெங்காயம்1
  • பெரிய தக்காளி1
  • கறிவேப்பிலை 1 கொத்து
  • பச்சை மிளகாய் 2-4
  • மிளகாய் வற்றல்2
  • தேங்காய் துருவல் கால் கப்
  • பருப்பு 2 கப்
  • மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
  • சீரகத்தூள் அரை டீஸ்பூன்
  • பூண்டு பல் 6
  • கடுகுஅரை டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய்தேவைக்கேற்ப
  • உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

  •   குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், சீரகத்தூள், பூண்டு, தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும். 
  • பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி வைக்கவும்.
  • பருப்பு வெந்ததும் அதனுடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூசணிக்காய், மல்லி இலை மற்றும் உப்பு சேர்க்கவும். தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். அரைத்த தேங்காயை பூசணிக்காய் மற்றும் பருப்புடன் சேர்த்து குக்கரை மூடி மீண்டும் ஒரு விசில் விடவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். 
  • பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும்.
  • தாளித்ததை வெந்த பூசணி பருப்பில் கொட்டி கலந்து விடவும். இப்போது சுவையான சாம்பல் பூசணி பருப்பு சாம்பார் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசை, சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்.

சாம்பல் பூசணி சாலட்

சாம்பல் பூசணி சாலட்

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
  • துருவிய சாம்பல் பூசணிகால் கிலோ
  • அவல் 1 கப்
  • தயிர் 1 கப்
  • பச்சை மிளகாய்2 (நறுக்கியது)
  • கொத்துமல்லி1 கைப்பிடி
  • காய்ந்த மிளகாய்1
  • பெருங்காயத்தூள்1 சிட்டிகை
  • உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க:

  • எண்ணெய் - தேவைக்கேற்ப
  • கடுகு - அரை டீஸ்பூன்
  • உளுந்து - அரை டீஸ்பூன்

செய்முறை :


  •   பூசணித் துருவலில் இருக்கும் தண்ணீரை லேசாகப் பிழிந்து தனியாக வைக்கவும். 
  • அவலை லேசாக தண்ணீரில் அலசி பிழிந்து, பூசணியை பிழிந்த தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  •  பிறகு துருவிய பூசணி, ஊறிய அவல், தயிர், உப்பு எல்லாவற்றையும் கலந்து வைத்து கொள்ளவும். 
  • பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், நறுக்கிய பச்சை மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து தாளித்து, பூசணி கலவையில் கொட்டி கலந்து விடவும்.
  • இறுதியாக நறுக்கி வைத்த கொத்துமல்லியைத் தூவி பரிமாறலாம்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

சாம்பல் பூசணி ஜஸ்

சாம்பல் பூசணி ஜஸ்

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
சாம்பல் பூசணித் துருவல் 1 கப்
வெள்ளரிக்காய்த் துருவல்அரை கப்
கேரட் துருவல்அரை கப்
நெல்லித் துருவல்அரை கப்
தயிர் கால் கப்
எலுமிச்சை சாறு2 டேபிள் ஸ்பூன்
புதினா இலை கைப்பிடி அளவு
மிளகுத்தூள்அரை டீஸ்பூன்
உப்புதேவைக்கேற்ப

செய்முறை :

  சாம்பால் பூசணி கேரட், மற்றும் வெள்ளரிக்காய், நெல்லித் துருவல்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுக்கவும். 

  இத்துடன் புளிப்பு இல்லாத தயிர், எலுமிச்சை சாறு, புதினா இலை, மிளகுத்தூள், உப்பு ஆகியவைகளைச் சேர்த்து கலக்கவும். இப்போது சாம்பல் பூசணி ஜஸ் தயார்.

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate