Weekend dinner 
Egg rice... potato fry & chilly potato
Egg rice... potato fry & chilly potato
🥔சில்லி உருளைக்கிழங்கு 🥔
தேவையான ப்பொருட்கள் :
உருளைக்கிழங்கு. : 1/2 kg
- பச்சை மிளகாய். : 3(நீளவாக்கில் நறுக்கவும்)
- பூண்டு. : 10 பல் (பொடியாக நறுக்கவும்)
- மிளகாய்த்தூள். : 4 டீஸ்பூன்
- வெங்காயம். : 1(சதுர துண்டு துண்டாக வெட்டவும்)
- அரிசி மாவு. : 2 டீஸ்பூன்
- சோளமாவு. : 2 டீஸ்பூன்
- சீனி. : 1/2 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது. : 2 டீஸ்பூன்
- தக்காளி சாஸ். : 1 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லி தழை. : சிறிது
செய்முறை. :
1. உருளைக்கிழங்கை தோல் சீவி தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து சிறிய சதுர துண்டு துண்டாக வெட்டவும்.
2. ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் அரிசிமாவு; சோளமாவு மற்றும் 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்; இஞ்சி பூண்டு விழுது; தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சிறிது தெளித்து நன்றாக கலக்கவும்.
3. பத்து நிமிடத்திற்கு பிறகு எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
4.இதை அப்படியே சாப்பிடலாம்.
5. சில்லி உருளைக்கிழங்கு செய்ய அடிகனமான வானலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு நீளவாக்கில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
6. அதில் 2 டீஸ்பூன்மிளகாய்த்தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் சீனி சேர்த்து நிறம் சிறிது மாறும் போது சதுரமாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
7. தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
8. சிறிது தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
9. இறுதியில் வறுத்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்றாக கலக்கவும்.
10.நன்றாக கெட்டி தன்மை வரும் வரை வதக்கவும்.
11. இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
12. ப்ரைட் ரைஸ் மற்றும் சப்பாத்தி யுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment