வெண்ணிலா ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பால்1ஃ2 கப்
பால்பவுடர்1 கப்
தண்ணீர்11ஃ2 கப்
வெண்ணிலா எசன்ஸ்1ஃ2 ஸ்பூன்
செய்முறை :
வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்வதற்கு முதலில் பாலுடன் அரை கப் தண்ணீர், வெண்ணிலா எஸன்ஸ் இரண்டையும் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
பிறகு பால்பவுடரை மீதி 1 கப் தண்ணீரில் கட்டி இல்லாமல் நன்கு கரைக்கவும். இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் அரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர் தண்ணீர் நிரப்பி, அதனுள் பால்பவுடர் கரைசல் பாத்திரத்தை வைத்து, பீட்டரால் நன்கு அடிக்கவும். பின்னர் இதை பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
பிறகு ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் இரண்டு மணி நேரம் வைத்து எடுத்து மீண்டும் பீட்டரால் நன்கு நுரை வரும் வரை அடித்து, அதனை மீண்டும் ஃபிரீஸரில் வைக்கவும். நன்கு இறுகி ஐஸ்கிரீம் கெட்டியானவுடன் வெளியில் எடுத்து விருப்பமான நட்ஸ் தூவி பரிமாறலாம். இப்போது டேஸ்டான வெண்ணிலாஐஸ்கிரீம் தயார்.
0 comments:
Post a Comment