முள்ளங்கி சட்னி !!
முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவக்குணம் கொண்டவை.
வெள்ளை முள்ளங்கி மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது. வெள்ளை
முள்ளங்கியில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ்,
இரும்புச்சத்துக்கள் உள்ளன. பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட முள்ளங்கியை
பயன்படுத்தி முள்ளங்கி சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
முள்ளங்கி - 2
கடலைப்பருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 2
தக்காளி - 4
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 10
தேங்காய் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :

முள்ளங்கி சட்னி செய்வதற்கு முதலில் முள்ளங்கியை தோல் சீவி விட்டு
பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் எண்ணெய்
ஊற்றி, அதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய வெங்காயம்
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், அதனுடன்
தக்காளி, புளி, உப்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி, தேங்காய் துருவல் ஆகியவற்றை
சேர்த்து நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் மூடி
வைத்து வேக வைத்து எடுத்து ஆற வைக்கவும். வதக்கிய கலவை ஆறியதும், அவற்றை
மிக்ஸியில் போட்டு அரைத்துககொள்ளவும். அரைக்கவும்.

பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு,
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன்
அரைத்து வைத்துள்ள முள்ளங்கி கலவையை சேர்த்து இறக்கினால் சுவையான முள்ளங்கி
சட்னி தயார்.
முள்ளங்கியின் மருத்துவ பயன்கள் - Health Benefits of Radish
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே கீழேயுள்ள 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
0 comments:
Post a Comment