வெஜிடபிள் சேமியா கிச்சடி/vegetable semiya kichadi
செய்முறை
- வறுத்த சேமியா - அரை கிலோ
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் - 1
- நறுக்கிய ப.மிளகாய் - 2
- உருளைக்கிழங்கு - 1 நறுக்கியது
- கேரட் - 1 நறுக்கியது
- பீன்ஸ் - 4 நறுக்கியது
- தக்காளி - 2 நறுக்கியது
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை, க.பருப்பு - தலா ஒரு ஸ்பூன்
செய்முறை
- கடாயில் எண்ணெய் காய வைத்து கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, தாளித்து கறிவேப்பிலை போட்டு வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் சிறிது உப்பு காய்கறிகளையும் சேர்த்து வதக்கி அதனுடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதில் சேமியா சேர்த்து கிளரி நன்கு வெந்து தண்ணீர் வற்றியவுடன் அடுப்பை 10 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்
- சுவையான வெஜிடபிள் சேமியா கிச்சடி ரெடி
0 comments:
Post a Comment