சாம்பல் பூசணி உளுந்து வடை
தேவையான பொருட்கள் :
- உளுந்து அரை கிலோ
- பூசணி கால் கிலோ
- கொத்த மல்லி 3 கைப்பிடி
- கறிவேப்பிலை 4 கொத்து
- பெரிய வெங்காயம் 2
- பச்சை மிளகாய் 5
- உப்புதேவைக்கேற்ப
- எண்ணெய் தேவைக்கேற்ப
செய்முறை :
- முதலில் உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து நன்கு பஞ்சு போல அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைக்கவும்.
- பிறகு சாம்பல் பூசணியை துருவி அதில் சேர்க்கவும்.
- பின் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்த மல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பின் உப்பு சேர்த்து பிசையவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த கலவையை தட்டையாக தட்டி பொரித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான சாம்பல் பூசணி உளுந்து வடை தயார்.
- இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை தக்காளி சட்னி மற்றும் சாம்பருடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.
0 comments:
Post a Comment