முள்ளங்கி ரசம் செய்யும் முறை!
தேவையான பொருட்கள்
முள்ளங்கி 2 சாறு பிழிந்தது
தக்காளி - 1/4 கிலோ
கருவேப்பிலை,கொத்தமல்லி - தேவையான அளவு
வறுக்க
துவரம்பருப்பு - 2 கரண்டி
தணியா - 3 கரண்டி
மிளகு - 2 கரண்டி
சீரகம் - 1 கரண்டி
பூண்டு - 8 பல்
பெருங்காயத்தூள் - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு,எண்ணை - தேவையான அளவு
செய்முறை
1) வறுக்க வேண்டிய பொருட்களை வறுத்து அரைக்கவும்.
2) முள்ளங்கியை சாறு பிழிந்து வைக்கவும்.
3) தக்காளியை மிக்ஸியில் அரைத்து மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
4) கொதி வந்ததும் முள்ளங்கி சாறு,வறுத்து அரைத்த மசாலா எல்லாம் போட்டு ,உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
5) கடுகு,கருவேப்பிலை,கொத்தமல்லி தாளித்து கொட்டவும்.
0 comments:
Post a Comment