ஆலு பராத்தா
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
சீரக தூள் -1/4 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
செய்முறை :
1.கோதுமை மாவை உப்பு சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரமாவது மூடி வைத்து ஊற விடவும்.
2.உருளைகிழங்கை வேக வைத்து அத்துடன் இஞ்சி, மிளகாய் மற்றும் கொத்தமல்லி பொடியாக நறுக்கி பிசைந்து கொள்ளவும்.
3.மாவை எடுத்து சிறிதளவு தேய்த்து அதில் கலவையை வைத்து மூடவும். நன்றாக மூடியவுடன் கையால் தட்டிய பின்னர் திரட்டவும்.
4.ஒரு தவா வைத்து சூடானதும் பராத்தாவை போட்டு நன்கு வெந்ததும் மறுப்புறம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் போட்டு வேகவிடவும்.
5.சூடாக ரைத்தாவுடன் பரிமாறவும் .
0 comments:
Post a Comment