Saturday, 7 April 2018

Virudhunagar Samayal - பேபிகார்ன் மட்டர் மசாலா

பேபிகார்ன் மட்டர் மசாலா

தேவையான பொருட்கள்:


  • பேபிகார்ன் - 200 கிராம்
  • பச்சைப் பட்டாணி - 50 கிராம்
  • தக்காளி - 2
  • மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
  • மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
  • சோயா சாஸ் - 1/2 தேக்கரண்டி
  • சீரகம் - 1/2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் - 1
  • தேங்காய்ப்பால் - 100 ml
  • கொத்தமல்லித் தழை - சிறிதளவு
  • எண்ணெய் - 5 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:


  • பேபிகார்ன்-ஐ சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • தக்காளியை மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய்  விட்டு பேபிகார்ன், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.
  • அதே கடாயில் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து தக்காளி பேஸ்ட் சேர்த்து கிளறவும்.
  • மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா, மல்லித்தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி, வதக்கி வைத்த பேபிகார்ன், பட்டாணி  உப்பு சேர்த்து மூடிபோட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  • பின்னர் அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் சோயா சாஸ் சேர்த்துக் கிளறவும்.
  • நன்கு கொதித்து கெட்டியானவுடன் இறக்கி கொத்தமல்லித்தழை தூவவும்.
  • சுவையான பேபிகார் மட்டர் மசாலா ரெடி

Related Posts:

  • Virudhunagar Samayal - சோயா மட்டர் மசாலா சோயா மட்டர் மசாலாதேவையான பொருட்கள்: சோயா - 20 பச்சைப் பட்டாணி - 25 கிராம் தக்காளி - 1 மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி … Read More
  • Virudhunagar Samayal - பேபிகார்ன் மட்டர் மசாலா பேபிகார்ன் மட்டர் மசாலா தேவையான பொருட்கள்: பேபிகார்ன் - 200 கிராம் பச்சைப் பட்டாணி - 50 கிராம் தக்காளி - 2 மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி மஞ்சள் … Read More

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate