Saturday, 28 April 2018

காலிஃபிளவர் மஞ்சூரியன

காலிஃபிளவர் மஞ்சூரியன
தேவையான பொருட்கள் :
ஊற வைக்க
காலிபிளவர் (சிறியது) – 1 (300 கிராம்)
மைதா மாவு – 3 டேபில் ஸ்பூன்
கார்ன் மாவு(corn flour) – 3 டேபில் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 and 1/2 டீஸ்பூன்
தந்தூரி மசாலா தூள் – 1 டீஸ்பூன் (விரும்பினால்)
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
ஆரஞ்சு கலர் – 1 சிட்டிகை ( விரும்பினால்)
தயிர் – 1 டேபில் ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
குழம்பு செய்ய
வெங்காயம் – 1 சிறியது
பூண்டு – 2 பல்
பச்சை மிளகாய் – 2
கொத்தமல்லித் தழை (சிறிதாக நறுக்கியது) – 1 டேபில் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 5 டேபில் ஸ்பூன்
சோயா சாஸ் – 2 டேபில் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபில் ஸ்பூன்
எண்ணெய் – 300 மி.லி வறுக்க
செய்முறை:
காலிஃபிளவரை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு, சிறு சிறு பூக்களாக அதை வெட்டி வென்னீரில் 3-4 நிமிடங்கள் ஊற போடவும்.
ஊற வைக்க தேவையான பொருட்கள் பட்டியலில் குறிப்பிட்டுள்ள எல்லா பொருட்களையும் சிறிது தண்ணீரையும் சேர்த்து கலக்கவும். காலிஃபிளவரை இதில் குறைந்தது 30 நிமிடங்களுக்காவது ஊற வைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது சூடானதும் அதில் சிறிது எண்ணெய் விடவும்.
எண்ணெய் சூடானவுடன், 5-6 காலிஃபிளவர் பூக்கள் என்ற கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து, துளையிட்ட கரண்டியால் சட்டியில் இருந்து எண்ணெயை வடிகட்டி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். மாரினேட்டை தனியாக வைக்கவும்.
வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றை சிறிதாக நறுக்கவும்.
ஒரு பெரிய இருப்புச் சட்டியை அடுப்பில் வைத்து நன்றாக சூடேற்றி சிறிது எண்ணையை சேர்க்கவும்.
எண்ணெய் சூடானவுடன், நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும். 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
தக்காளி சாஸ், சோயா சாஸ், 3 மேசைகரண்டி மாரினேட் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும்.
உப்பு மற்றும் வறுத்தெடுத்த காலிஃபிளவர் பூக்களை சேர்த்து நன்றாக கிளறி 3-4 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவிடவும்.
கொத்தமல்லி இலைகளைக் கொண்டு அழகுபடுத்தவும்.

Related Posts:

  • பூண்டு - மிளகுக் குழம்பு பூண்டு - மிளகுக் குழம்பு தேவையானவை:  உரித்த பூண்டு - ஒரு கிண்ணம்,  தனியா - 3 டேபிள்ஸ்பூன்,  மிளகு - 2 டேபிள்ஸ்பூன், … Read More
  • காலிஃபிளவர் மஞ்சூரியன காலிஃபிளவர் மஞ்சூரியன தேவையான பொருட்கள் : ஊற வைக்க காலிபிளவர் (சிறியது) – 1 (300 கிராம்) மைதா மாவு – 3 டேபில் ஸ்பூன் கார்ன் மாவு(corn flour) –… Read More
  • கோவக்காய் துவையல் - Kovaikkai Thogaiyal கோவக்காய் துவையல் கோவக்காய் சக்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காயாகும். அதைக் கொண்டு சில உணவு வகைகள் தேவையான பொருட்கள் : கோவக்காய்  – 400 கி… Read More
  • ஓட்ஸ் வெஜிடேபிள் ரொட்டி ஓட்ஸ் வெஜிடேபிள் ரொட்டி தற்போது காலை உணவாக ஓட்ஸ் எடுத்துக் கொள்வோரின் எண்ணிக்கை  அதிகம் உள்ளது.  ஆனால் அந்த ஓட்ஸை பலவாறு செய்து… Read More

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate