Sunday, 15 October 2017

கடைப்பிடிக்க_வேண்டிய_நடைமுறைகள் தெரியுமா?

கடைப்பிடிக்க_வேண்டிய_நடைமுறைகள்
தெரியுமா?





 
அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் & ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது.
#பசிக்கும்_போது_தான்_சாப்பிட_வேண்டும்.
மிளகு சேர்ப்பதால், உணவில் உள்ள விஷம் நீங்குவதோடு உடலில் உள்ள விஷமும் முறிகிறது.
உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல்; குளிர்ச்சியையும் தருகிறது.
வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் அது உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது.
கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை.
உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும்.
காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும்.
உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது.
இடதுகையை கீழே ஊன்றிக் கொண்டை சாப்பிடக்கூடாது.
சாப்பிடும் சமயம் டி.வி பார்க்கக் கூடாது.
வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது.
காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது.
சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.
உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். தயவுசெய்து வலைத்தளம் முதலியன அப்போது வேண்டாமே!
இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது.
சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது.
நின்று கொண்டு சாப்பிக் கூடாது.
அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது.
சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது.
தட்டை மடியில் வைத்துக் கொண்டும், படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது.
இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும், விரலில் ஒட்டிக் உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்.
ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.
எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது.
வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது.
புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும்.
வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.
நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது.
இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.
உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது.
அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர்.
உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதால் மேற்கண்ட நடைமுறைகளை கடைப்பிடிப்பது சிறப்பைத்தரும்

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate