Showing posts with label சப்பாத்திக்கு அருமையான காராமணி கூட்டு - Sidedish for Chappathi. Show all posts
Showing posts with label சப்பாத்திக்கு அருமையான காராமணி கூட்டு - Sidedish for Chappathi. Show all posts

Sunday, 24 December 2017

மசாலா சப்பாத்தி | masala chapathi

மசாலா சப்பாத்தி | masala chapathi

தேவையான பொருள்கள்

  • கோதுமை மாவு - 2 கப்
  • தயிர் -  அரை   கப்
  • சீரகத் தூள் -  கால்  ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -  கால் ஸ்பூன்
  • கரம்மசாலா தூள் - 1  ஸ்பூன்,
  • பெரிய வெங்காயம் நறுக்கியது - 1
  • கொத்தமல்லித்தழை - 2  ஸ்பூன்
  • கஸ்தூரிமேத்தி -  கால்  ஸ்பூன்
  • எண்ணெய் - 5  ஸ்பூன்

செய்முறை


கோதுமை மாவு, சீரகத்தூள், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள்,  கரம்மசாலா தூள், வெங்காயம், கொத்தமல்லித்தழை, கஸ்தூரிமேத்தி சேர்த்து நன்றாக கலக்கவும்.

 தயிர், எண்ணெய் ஒன்றாக மாவுடன் சேர்த்து    பின்   தேவையான அளவு   தண்ணீர்   சேர்த்து   சப்பாத்தி மாவு போன்று பிசையவும்.

பின்பு      மெல்லிய  சப்பாத்திகளாக   தேய்த்து தோசை   கல்லில் இரண்டு பக்கம்  திருப்பி  போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான  மசாலா சப்பாத்தி ரெடி

Thursday, 12 October 2017

சப்பாத்திக்கு அருமையான காராமணி கூட்டு - Sidedish for Chappathi

சப்பாத்திக்கு அருமையான காராமணி கூட்டு

காராமணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சத்தான காராமணி கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

#தேவையான #பொருட்கள் :
காராமணி - 200 கிராம்,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 2,
துவரம்பருப்பு (வேக வைத்தது) - ஒரு கப்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


#செய்முறை :

1-காராமணியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு வேக வைத்து தனியே வைக்கவும்.

2-தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

3-வேக வைத்த காராமணியுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, வேக வைத்த பருப்பையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.

4-மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து அதை காராமணியில் கொட்டி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

சத்தான காராமணி கூட்டு ரெடி.

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate