சர்க்கரையிலிருந்து ஏன் வெல்லத்திற்கு மாற வேண்டும் தெரியுமா?
சர்க்கரைக்கான ஒரு பொதுவான மாற்று வெல்லம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வெல்லத்தின் சுவை குறித்து விளக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் இதன் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்களின் ஆதாரமாக இருக்கும் வெல்லம், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை எதிர்க்கும் திறன் வெல்லத்தில் உள்ளது. பல்வேறு பெருந்தொற்று நோயால் பாதிக்கப்படும் இந்த காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வழக்கமான வெள்ளை சர்க்கரையிலிருந்து வெல்லம் பயன்பாட்டிற்கு பலரும் மாறி வருகின்றனர்.
வெல்லம் பல்வேறு வகைகளில் வருகிறது என்பதை நம்மில் பலர் அறிவதில்லை. மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான 3 வகை வெல்லம் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம். வழக்கமான வெள்ளை சர்க்கரையை விட வெல்லம் அதிகம் பயன்படுவதற்கு அதன் ஆரோக்கிய நன்மைகளும் ஒரு முக்கிய காரணம். ஆகவே வெல்லத்தின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றை இப்போது காணலாம்
மலச்சிக்கல் வெல்லம் உட்கொள்வதால் செரிமான நொதிகள் சிறப்பாக செயல்புரிந்து, மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. இதன் காரணமாவே ஒரு மிகப் பெரிய விருந்து உணவிற்கு பிறகு ஒரு துண்டு வெல்லம் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் செரிமானம் எளிதாகிறது. மலச்சிக்கல் காரணமாக மனநல ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த பாதிப்பை உடனடியாக தடுப்பது அவசியம். மேலும் நீடித்த நாட்கள் மலச்சிக்கல் பாதிப்பு இருப்பதால் எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி பாதிப்பும் ஏற்படலாம்.
கல்லீரலை சுத்தம் செய்கிறது வெல்லம் என்பது சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுவது வெறும் சுவைக்காக மட்டுமல்ல. கல்லீரலை சுத்தம் செய்யும் கூறுகள் வெல்லத்தில் உள்ளது . கல்லீரல் செயல்பாடுகளை பாதிக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய வெல்லம் உதவுகிறது. மனிதர்களின் பல்வேறு வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் காரணமாக பல்வேறு பாதிப்புகளை அடையும் கல்லீரலுக்கு வெல்லம் உட்கொள்வதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது வெல்லத்தில் அதிக அளவு ஜிங்க் சத்து உள்ளது. இது உடலில் தீங்கு விளைவிக்கும் கூறுகள் நுழையாமல் தடுக்கிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று பாதிப்பிலிருந்து மற்றும் இதர பாக்டீரியா மற்றும் வைரஸ் நோயிலிருந்தும் பாதுகாக்கும் ஒரு கேடயமாக வெல்லம் விளங்குகிறது
வெல்லத்தின் வகைகள்:
பாகு வெல்லம் கரும்பு சாற்றில் இருந்து எடுக்கப்படும் பொதுவான வகை பாகு வெல்லம். இது பழுப்பு நிறத்தில் இருக்கும். இதனை இயந்திரம் இல்லாமல் தயாரிக்க முடியும். கொதிக்க வைப்பது, சலிப்பது, வடிகட்டுவது போன்ற செயல்பாடுகள் இந்த தயாரிப்பில் அடங்கும். கீர், அல்வா போன்ற இந்திய இனிப்பு வகைகளில் வெல்லம் பயன்படுத்துவதால் அதன் சுவை மற்றும் நிறம் மேலும் அதிகரிக்கும்.
தென்னை வெல்லம் தென்னை மரத்தின் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கும் தென்னை வெல்லத்தில் மெக்னீசியம், இரும்பு போன்ற சத்துகள் மிக அதிகம் உள்ளன. இது வழக்கமான சுக்ரோஸ் அல்ல. மேலும் இவற்றில் செயற்கை பொருட்கள் கலவை இல்லை. மேலும் சமையலில் காரமான உணவின் காரத்தைக் குறைக்க இந்த வகை வெல்லம் வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது
பனை வெல்லம் பனை மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் வெல்லம் பனை வெல்லம் ஆகும். இது செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது. உடலில் நீர் தேக்கம் ஏற்படுவதைக் குறைக்க இந்த வெல்லம் உதவுகிறது. பனை வெல்லம் உடலுக்கு ஒரு சிறந்த க்ளென்சர் போல் செயல்புரிகிறது. மேலும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எடை இழப்பு செயல்பாட்டிற்கும் உதவுகிறது
முடிவு சர்க்கரைக்கு ஒரு சிறந்த மாற்று வெல்லம். ஆகவே காபி போன்ற பானங்களுக்கு வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம். சமையலில் காரத்தை சமநிலைப்படுத்த வெல்லத்தை பயன்படுத்தலாம். வெல்லத்தின் சிறப்பு அம்சம் அதன் ஆரோக்கிய நன்மைகள் ஆகும். ஆகவே அனைவரும் வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதை விடுத்து வெல்லம் பயன்படுத்தத் தொடங்கலாம் . இனிப்பிற்கான உங்கள் தேடலை ஆரோக்கியமானதாக மாற்றலாம். ஆனால் எந்த ஒரு பொருளையும் அதிகமாக பயன்படுத்துவது ஆபத்தை உண்டாக்கும் என்பதால் வெல்லம் பயன்படுத்துவதிலும் கவனம் தேவை. ஆகவே அதன் அளவை கருத்தில் கொண்டு பயன்படுத்தவும்.
0 comments:
Post a Comment