வெஜிடபிள் கைமா இட்லி | kaima idli
தேவைாயன பொருள்கள்
செய்முறை
முளை கட்டிய நவதானிய சாலட்
Pumpkin Soup
Low Fat Recipes
தேவைாயன பொருள்கள்
- இட்லி - 8
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 2
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
- தனியா தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- வேக வைத்த பச்சைப் பட்டாணி - 1/4 கப்
- குடை மிளகாய் - 1
- பச்சை மிளகாய் - 1
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை
- ஆறிய இட்லியை சிறிய துண்டு களாக வெட்டிக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி இட்லி துண்டுகளை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
- மற்றொரு கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைப் பட்டாணி குடைமிளகாயை சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- பின்னர், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மிளகாய்தூள், தனியா தூள், கரம் மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதங்கியதும் இட்லி துண்டுகளை சேர்த்து கிளறி 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து கொத்தமல்லித் தழை தூவி,இறக்கி சூடாக பரிமாறவும்.
- சுவைாயன கீமா இட்லி ரெடி
முளை கட்டிய நவதானிய சாலட்
Pumpkin Soup
Low Fat Recipes
0 comments:
Post a Comment