புதினா சென்னா சுண்டல்
- கருப்பு சென்னா – 2
- தேங்காய்த்துருவல் – அரை கப்
- பச்சை மிளகாய் – 3
- புதினாத்தழை – அரை கைப்பிடி
- இஞ்சி – 1 துண்டு
- கடுகு – 1 ஸ்பூன்
- எண்ணெய் – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை, உப்பு – சிறிது
செய்முறை:
கருப்புக் கொண்டக்கடலையை முதல் நாளே ஊற வைத்து நன்கு கழுவி உப்பு சேர்த்து வேகவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி புதினாவை வதக்கி அதனுடன் இஞ்சி, தேங்காய்த்துருவல் சேர்த்து அரைத்து எடுக்கவும். கடுகு தாளித்து வெந்த சுண்டல், அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
0 comments:
Post a Comment