தக்காளி ஊறுகாய்..!!!
தேவையான பொருட்கள் :
- தக்காளி – 1/2 கிலோ
- நல்லெண்ணெய் – 200கிராம்
- பூண்டு – 10 பல்
- புளி – எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கடைசியில் தாளிக்க :
- நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
- கருவேப்பில்லை – 10 இலை
செய்முறை :
தக்காளியினை கழுவி தண்ணிர் இல்லாமல் துடைத்துவைத்து கொள்ளவும். பூண்டினை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.(மிகவும் மைய அரைக்க கூடாது). புளியினை பொடியாக அரிந்து வைத்து கொள்ளவும்..
ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியினை போட்டு தட்டு கொண்டு மூடிவிடவும்..
5 நிமிடத்திற்கு ஒரு முறை தக்காளியினை திருப்பிவிட்டு நன்றாக வேகவிடவும்..
நன்றாக வெந்தபிறகு அதனை கரண்டி அல்லது மத்துவைத்து மசித்துவிடவும்..
அதன்பிறகு பூண்டு ,புளி ,மிளகாய் தூள் , மஞ்சள் தூள் , உப்பு சேர்த்து தட்டு போட்டு மூடி வேகவிடவும்..
எண்ணெய் பிரிந்து வரும் வரை சிறிய தீயில் வதக்கவும்..
எண்ணெய் பிரிந்து வந்த பிறகு கடைசியில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் தாளித்து அதில் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கவும்..
இப்பொழுது சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி..!!!
0 comments:
Post a Comment