கோவக்காய்
துவையல்
கோவக்காய் சக்கரை
நோயாளிகளுக்கு ஏற்ற காயாகும். அதைக் கொண்டு சில உணவு வகைகள்
தேவையான பொருட்கள் :
- கோவக்காய் – 400 கிராம்
- தேங்காய் – 100 கிராம்
- தேங்காய் எண்ணைய் – 10 மி.லி.
- பச்சை மிளகாய் – 20 கிராம்
- இஞ்சி – 20 கிராம்
- கடலைப் பருப்பு – 130 கிராம்
- கொத்தமல்லி இலை– 10 கிராம்
- கறிவேப்பிலை – 10 கிராம்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :கோவைக்காயை சுத்தப்படுத்தி நன்கு கழுவவும்.
கழுவிய கோவைக்காயை சிறிய துண்டுகளாக
நறுக்கிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடாக்கவும். அதில் கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கோவக்காய், உப்பு
இவற்றைப் போடவும்.
இந்த கலவையை நன்கு வேக வைக்கவும். இத்துடன்
துருவிய தேங்காயை சேர்த்து நன்கு அரைக்கவும்.
பிறகு அரைத்த துவையல் மீது கொத்தமல்லி
இலையைத் தூவவும்.
0 comments:
Post a Comment