Monday, 26 October 2015

மஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy



மஷ்ரூம் குருமா/கிரேவி/ சாஃப்ட் குவிக் சப்பாத்தி - Mushroom Kurma/Gravy 


தேவையான பொருட்கள்:


  • பட்டன் காளான் - 200 கிராம்
  •  வெங்காயம் - 2
  • தக்காளி -1
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - கால்டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • மல்லி,புதினா - சிறிது
  • தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
  • முந்திரி -4
  • மிளகாய்த்தூள் - அரைடீஸ்பூன்
  • சீரகத்தூள் - அரைடீஸ்பூன்
  • மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
  • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கு.
செய்முறை:

ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மற்றொரு வெங்காயத்துடன், தக்காளி, தேங்காய், முந்திரி சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். காளானை கொதிக்கும் நீரில் போட்டு அலசி, நறுக்கி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காயவும், நறுக்கிய வெங்காயம் போட்டு சிவற வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் கரம் மசாலா சேர்க்கவும், வதக்கவும்.
அத்துடன் மல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்க்கவும். சிறிது வதங்கட்டும்.
அத்துடன் நறுக்கிய காளான் சேர்த்து, வதக்கவும்.
காளானுடன் மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பிரட்டவும்.
சிறிது உப்பு சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதிவந்தவுடன் அரைத்த வெங்காயம், தக்காளி, தேங்காய், முந்திரி விழுதை சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.
கலந்து விட்டு கொதிக்க விடவும். சிம்மில் வைத்து குருமா கொதிக்கட்டும்,நன்கு அரைத்து விட்ட தேங்காய் வாடை மடங்க வேண்டும். காளானில் ஒரு கடுப்பு இருக்கும்.
அதனால் உப்பு பார்த்து சிறிது சேர்க்கவும்.காரமும் ஏற்றுக் கொள்ளாது, குறைவாக தேவைக்கு காரம் சேர்த்தால் சரியாக இருக்கும்.
சுவையான சத்தான காளான் குருமா ரெடி.
சப்பாத்தி,பரோட்டா,நாண்,ஆப்பம்,தோசை,இட்லி,சாதம் வகைகளுடனும் பரிமாறலாம். 

Related Posts:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

FOLLOW

Follow

Blog Archive

Followers

Search This Blog

Broad Iron Tadka Ladle

KUTHU VILAKKU (BRASS LAMPS)

Translate