இட்லி மிளகாய்ப் பொடி - கருவேப்பிலை
பொடி /
Idli Milagai Podi - Curry leaves Podi
Idli Milagai Podi - Curry leaves Podi
இட்லிக்கு தொட்டுக் கொள்ள
என்னதான் அருமையான சாம்பார் சட்னி வைத்தாலும் பொடி இருக்கா என்ற கேள்வி தவிர்க்க முடியாத
ஒன்று. அதனால் அப்ப அப்ப கொஞ்சமாக நான் இப்படி பொடித்து வைத்துக் கொள்வதுண்டு.ஒவ்வொரு
முறையும் ஒவ்வொரு விதமாக பொடி செய்வேன்.
இந்த முறை செய்த பொழுது.
இட்லி மிளகாய்ப் பொடி :-
தேவையான பொருட்கள் :
தோல் நீக்கிய உளுத்தம் பருப்பு - அரை கப்
கடலை பருப்பு - கால் கப்
எள்ளு - 1 டேபிள்ஸ்பூன்( விரும்பினால்)
மிளகாய் வற்றல் -6- 8 ( காரம் அவரவர் விருப்பம்)
பூண்டு பல் - 4 (தோலுடன்)
கருவேப்பிலை - 2 இணுக்கு
பெருங்காயப் பொடி - அரைடீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கருகாமல் மிளகாய் வற்றலை
வறுத்து எடுக்கவும்.பருப்பு வகைகளைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.வறுபட்டவுடன்,
பூண்டு, கருவேப்பிலை, எள்ளு, தேவைக்கு உப்பு போட்டு வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
மிக்ஸியில் பொடிக்கும் பொழுது பெருங்காயம் சேர்த்து
பொடித்து பேப்பரில் தட்டி ஆற விட்டு எவ்ர்சில்வர் டப்பா அல்லது கண்ணாடி பாட்டிலில்
போட்டு மூடி வைத்து பயன் படுத்தவும்.
தேவைக்கு பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசையுடன் பரிமாறவும்.
கருவேப்பிலைப்
பொடி:
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை - ஒரு கப்
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கடலை பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்
- 4
மிளகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வற்றல் பருப்பு வகைகளை
நன்கு சிவற வறுத்து எடுக்கவும்.அடுத்து கருவேப்பிலை மொறு மொறுப்பாக வறுத்த பின்பு மிளகை
வறுத்து உப்பு பெருங்காயம் சேர்த்து ஒரு சேர வெதுப்பி ஆற விட்டு மிக்ஸியில் பொடித்து
எடுக்கவும்.
பொடித்ததை மறக்காமல் பேப்பரில் தட்டி ஆற வைக்கவும்.
பின்பு பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இட்லி தோசையுடன் பொடியை நல்ல எண்ணெயில் குழைத்து
பரிமாறவும்.
0 comments:
Post a Comment