பூண்டு - மிளகுக் குழம்பு
தேவையானவை:
உரித்த பூண்டு - ஒரு கிண்ணம்,
தனியா - 3 டேபிள்ஸ்பூன்,
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
உளுத்தம்பருப்பு,
சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,
புளி - சிறிய உருண்டை,
உப்பு - தேவையான அளவு,
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு - அரை டீஸ்பூன்
செய்முறை:
கடாயில் தனியா, மிளகு,
காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு,
கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக
வறுத்து மிக்ஸியில்
பொடிக்கவும்.
சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும்.
கரைத்த புளித்தண்ணீரில்
கறிவேப்பிலை விழுது,
வறுத்து அரைத்த பொடி,
உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து
வைத்துக்கொள்ளவும்.
கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து,
லேசாகச் சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி
வேகவிடவும்.
வெந்ததும்,
புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும்.
கெட்டியானதும்
இறக்கவும்.
மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்:
பசியைத் தூண்டி, செரிமானத்தைத் தரும். நோய்த் தொற்றைத் தடுக்கும்.
பூண்டுக்கு, கொழுப்பைக் குறைக்கும்
தன்மை உண்டு.
0 comments:
Post a Comment