சம்மர் ஸ்பெஷல் : தர்பூசணி பழத்தின் நன்மைகள்!!
குளிர்ச்சி தரும் தர்பூசணி!

கோடை வந்துவிட்டாலே வெயில் அதிகமாகத்தான் இருக்கும். அதை எப்படியெல்லாம் சமாளிக்கலாம்? எந்த பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது? சர்க்கரை நோயாளிகள் எதை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது மற்றும் குழந்தைகளுக்கு எப்படி சத்துள்ள பழங்களை தருவது? என்பதை இனிவரும் பகுதிகளில் பார்க்கலாம்.
கோடைகாலங்களில் மற்ற காலங்களை விட தாகம் அதிகம் ஏற்படும். எனவே, இக்காலங்களில் நீர்ச்சத்து நிறைந்துள்ள தர்பூசணி பழங்களை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறையும். மேலும், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதை தடுக்கும்.
தர்பூசணி வெயில் காலத்திற்கு ஏற்ற பழம். இதைப் பழமாகவும், பழச்சாறாகவும் சாப்பிடலாம். கோடைக்காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச்சத்தும் நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.
தர்பூசணி பழத்தில் உள்ள சத்துகள் :
வைட்டமின் சி
பேண்டோதெனிக் அமிலம்
தாமிரம்
பயோட்டின்
பொட்டாசியம்
வைட்டமின் ஏ
வைட்டமின் பி
உயிர்ச்சத்து பி
மெக்னீசியம்
மேலும், தர்பூசணியில் தாதுக்கள், கார்போஹைட்ரேட் மற்றும் பைர் ஆகியவை உள்ளது.
தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவும் இருப்பதால், இதனை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொண்டால் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் உடலின் வெப்பத்தையும், இரத்த அழுத்தத்தையும் சரிசெய்ய முடியும். தர்பூசணியில் தமனி மற்றும் இரத்த நாளங்களை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.
கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய், கீழ்வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.
100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர், 46 கலோரிகள், 7 சதவீதம் மாவுச்சத்து உள்ளது.
குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் அழுத்த நோய், மாலைக்கண் நோய் என கண் சம்பந்தப்பட்ட பல நோய்கள் குணமாகும்.
இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் முடி கொட்டுதல் நின்று முடி வளர்ச்சி பெறும்.
தர்பூசணி பழச்சாறு :
தேவையானப் பொருட்கள் :
தர்பூசணி துண்டுகள் - 4
சர்க்கரை - சிறிது
உப்பு - அரை சிட்டிகை
மிளகு தூள் - ஒரு சிட்டிகை
ஐஸ் கட்டிகள் - 6
செய்முறை :
தர்பூசணி துண்டுகளை எடுத்து கழுவி, அதிலுள்ள கொட்டைகளை நீக்கவும்.
பின்பு, மிக்ஸியில் ஐஸ் கட்டிகள், மிளகு தூள், சர்க்கரை, உப்பு, பழம் ஆகிய அனைத்தையும் போட்டு நன்கு அடிக்கவும்.
பின்பு, வடிகட்டியில் வடிகட்டினால் சுவையான தர்பூசணி பழச்சாறு தயார்.
அனைவரும் உடலை குளிர்ச்சியுடனும், வறட்சியில்லாமலும் வைத்துக்கொள்ள முயற்சிப்போம். அதற்காக தண்ணீர் அதிகம் குடிப்பதுடன், நிறைய பழங்களையும் வாங்கி சாப்பிடுவோம்.
0 comments:
Post a Comment